Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

Saregama இந்தியா நிறுவன நிகர லாபம் 46.4% உயர்வு

Saregama இந்தியா நிறுவன நிகர லாபம் 46.4% உயர்வு

பிற வருவாய்கள் உள்பட நிறுவனத்தின் மொத்த வருவாய் 32.28 சதவீதம் உயர்ந்து ரூ.319.47 கோடியாக உள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

சரேகமா இந்தியா, நடப்பு நிதியாண்டின் செப்டம்பர் காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபமாக ரூ.64.17 கோடியைப் பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ஈட்டிய ரூ.43.83 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 46.4 சதவீதம் அதிகமாகும்.

நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 36.63 சதவீதம் அதிகரித்து ரூ.314.30 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் இது ரூ.230 கோடியாக இருந்தது. மொத்த செலவுகள் 31 சதவீதம் உயர்ந்து ரூ.237.69 கோடியாக உள்ளது. இசைப் பிரிவின் வருவாய் 35 சதவீதம் அதிகரித்து ரூ.251.3 கோடியாக உள்ளது. 

நேரடி இசை நிகழ்ச்சிகள் மூலம் கிடைத்த வருவாய் 101 சதவீதம் உயர்ந்து ரூ.44.7 கோடியாகப் பதிவாகியுள்ளது. அதிக எண்ணிக்கையிலான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதே இதற்கு முக்கியக் காரணமாகும்.

பிற வருவாய்கள் உள்பட நிறுவனத்தின் மொத்த வருவாய் 32.28 சதவீதம் உயர்ந்து ரூ.319.47 கோடியாக உள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் மொத்த ஒருங்கிணைந்த வருவாய் 27 சதவீதம் அதிகரித்து ரூ.587.28 கோடியாகப் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து சரேகமா இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவர் அவர்னா ஜெயின் கூறுகையில், "இசைத் தொழிலின் வளர்ச்சி மற்றும் நேரடி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பொழுதுபோக்குத் துறைகளில் விரிவாக்கம் ஆகியவை இந்த வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது" என தெரிவித்தார்.

மும்பை பங்குச் சந்தையில் சரேகமா நிறுவனத்தின் பங்கு நேற்று ரூ.623.45-க்கு விற்பனையானது.

முந்தைய செய்தி
ரானே குழும நிறுவன வருவாய் 34.5% உயர்வு
அடுத்த செய்தி
Agricultural solarisation offers 116 GW opportunity for domestic industry

தொடர்புடைய செய்திகள்